பரந்துார் விமான நிலைய விவகாரம் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை

Government of Tamil Nadu
By Thahir Dec 19, 2022 09:41 AM GMT
Report

பரந்துார் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது.

கிராம மக்கள் போராட்டம் 

ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக் கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாசியர், டிஎஸ்பி, தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Parantur airport issue will be discussed by the Cabinet tomorrow

அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை 

பரந்துார் விமான நிலையத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பும் நிலையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.