பிக் பாஸ் வீட்டில் நடமாடும் அமானுஷ்யம் - பயந்து கதறும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் ஒன்று நடமாடுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 இதில் 21 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் 2 போட்டியாளர்களான சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இதனிடையே 19 பேர் போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
தினம் தோறும் வாக்குவாதம், ஆடல், பாடல், மகிழ்ச்சி என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம்
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீடு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் அமுதவானன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திகில் ஊட்டும் கதையை கூறி தனலெட்சுமியை பயமுறுத்தினார்.

அதை நம்பிய தனலெட்சுமி கண்ணீர் மல்க பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிய நிலையில், அவரை சக போட்டியாளர்கள் அது அமுதவானனின் கட்டுக்கதை எனக் கூறி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் மைனா என்கிற நந்தினி அமுதவானனிடம் அமானுஷ்ய சக்தி வீட்டில் இருப்பதாகவும் அதை அவர் உணர்ந்ததாகவும் கூறினார்.

அதே நேரம் அமுதவானனின் பயம் கலந்த ரியாக்ஷனை கலாய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil
சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு IBC Tamil