காதல் கதையில் களமிறங்கும் பா.ரஞ்சித்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Pa Ranjith Sarpatta paramparai Love movie
By Petchi Avudaiappan Jul 19, 2021 05:16 PM GMT
Report

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்தபடம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்டக்கத்தி’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்கள் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

அதேசமயம், ‘ரைட்டர்’, ’குதிரை வால்’, துருவ் விக்ரமின் பெயரிடாதப்படம் உள்ளிட்டப் படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது’என்ற படத்தை இயக்குகிறேன்.

அது காதல்களைப் பற்றியப் படம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படக்கூடிய காதலைக் குறித்து பேசப்போகிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் பா.ரஞ்சித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.