பா.ரஞ்சித்தின் இந்த படம் ஓடிடியில் ரிலீசா? - ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படமான "சார்பட்டா பரம்பரை' ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலா வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் ஆகியோரை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார். சென்னையில் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தியுள்ளார். இப்படத்தின், டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சார்பட்டா பரம்பரை படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் நேரடியாக அமேசான் பிரைமில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது