கார்த்திகை தீபத்திருவிழா; திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றம்

Festival
By Thahir Dec 06, 2022 03:53 AM GMT
Report

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 27-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Parani Deepam is lit in Tiruvannamalai temple

இதில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மகா தீபம் 

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.