“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Thiru Aug 16, 2026 05:53 AM GMT
Report

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சாலைக்கு “தளபதி விஜய்” என கிராம மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அடுத்து பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம் | Parandur People Named Thalapathy Vijay To Road

கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு

கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு

 தளபதி விஜய் சாலை

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  அந்த கிராம மக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

தீர்மானத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய்” சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.