பரந்தூர் விமான நிலைய விவகாரம் - அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை

Government of Tamil Nadu
By Thahir Dec 20, 2022 02:40 AM GMT
Report

பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை.

பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று மக்கள் பேரணி நடைபெற்றது.

ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரம் - அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை | Parandur Airport Issue Today Cabinet Meeting

மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும் நிலையில் அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

அதன்படி, பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

விமான நிலையம் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், 13 கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு, நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து அமைச்சர்கள், போராட்ட குழுவினர் இடையே இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.