தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகம் வருகை தருகிறது துணை ராணுவப்படை

tamil people election safe
By Jon Mar 01, 2021 05:34 PM GMT
Report

தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப்படை 25 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த படையினர் டெல்லியில் இருந்து ரயிலில் 25 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் வீதம், 4500 பேர் இடம்பெற்று இருப்பார்கள்.

சென்னையில் 12 துணை ஆணையரின் கீழ் 12 கம்பெனி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப்படையினரும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.