சூ்டானில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் துணை ராணுவம் தாக்குதல்..!
சூடானில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்- உணவு, தண்ணீர் இல்லை
உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்
சூடான் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் போரில் இந்தியர்கள் தற்பொழுது உணவு, தண்ணீர் இன்றி வாழவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கின்றனர்.
சூடானின் போர் சூடான் நாட்டில் தற்போது எந்த வித அறிவிப்பும் இன்றி ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் போர் நதந்துவருகிறது, அவை மக்கள் வெளியேற தற்காலிகமாக போர் நிறுத்தபட்டது.
போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை உள்ள நிலையில், இந்தியர்கள் வசிக்கும் உம்துர்மன் எனும் பகுதியில் மறுபடியும் போர் நடத்துவதாக தகவல் வெளியானது.

துணை ராணுவம் தாக்குதல்
இந்தியர்கள் தவிப்பு மேலும் தகவல் அறிந்து அங்கு உள்ள இந்தியர் ராவுத்தர் என்பவரிடம் தொடர்பு கொள்கையில்,
அவர் தான் உம்துர்மன் எனும் பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கு திடிரென்று துணை ராணுவப்படை தாக்குதல் நடத்துவதாகவும்.
மேலும் அங்குள்ள சூடான் மக்கள் உயிருக்கு பயந்து அவர்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டதாகவும். இந்தியர்கள் வெளியேறவும் முடியாமல், அங்கு தண்ணீர், உணவு எதுவும் இன்றி தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அலுவலகங்களுக்கு சென்றவர்களும், மற்ற இடங்களுக்கு சென்றவர்களும் வீடு திரும்ப முடியாமலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.