பரக் அக்ராவல் ஒரு வைரஸ், இந்த வைரசுக்கு அழிவே கிடையாது- ஆனந்த் மகேந்திரா கிண்டல்

ட்விட்டரின் புதிய சிஇஓ வாக பொறுப்பேற்றுள்ள  பரக் அகர்வால்  இந்தியன் வைரஸ் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

உலக பயன்படுத்தும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தின்  புதிய சிஇஓ வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.

ஏற்கனவே  முன்னதாக, சுந்தர் பிச்சை, சத்யன் நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, சாந்தணு நாராயண் ஆகியோர் உலகின் டாப் தொழில் நுட்ப நிறுவனங்களின் சிஇஓ’க்களாக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது பரக் அகர்வால் ட்விட்டரின் சிஇஓ வாக மாறியிருப்பது பெருமை கொள்ளும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆனந்த்  மகேந்திரா தனது ட்விட்டர் பதிவில்:

“ இவர் ஒரு தொற்று நோய். இது இந்தியாவில் தோன்றியது என்பதில் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். இது இந்திய CEO வைரஸ். இதற்கு எந்த தடுப்பூசியும் கிடையாது” என்று வேடிக்கையாக ட்விட் செய்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்