பிரபல நிறுவன பிரியாணி பாக்ஸில் துள்ளிக் குதித்த எலி - பகீர் காட்சிகள்!
Paradise Biryani ஐமேக்ஸ் கிளையில் எலிகள் சுற்றி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரியாணியில் எலி
ஐதராபாத்தின் பிரபலமான பாரடைஸ் பிரியாணி கடையில் வாங்கப்பட்ட பிரியாணி பாக்ஸில் இருந்து எலி ஒன்று வெளியேறி ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

இந்த வீடியோ, பிரசாத்தின் ஐமேக்ஸ் திரையரங்கிற்கு அருகிலுள்ள பாரடைஸ் பிரியாணி கடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஷாக் காட்சிகள்
அந்த வீடியோவில், ஒரே நேரத்தில் இரண்டு எலிகள் சுவர் மற்றும் டேபிள்கள் மீது இயல்பாகச் சுற்றிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அதிலிருந்து சில நிமிடங்களில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிரியாணி பெட்டியிலிருந்து, எலி ஒன்று வெளியே வருவதையும் காண முடிகிறது.
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பயனர், “பாரடைஸ் பிரியாணியின் ஐமேக்ஸ் கிளையில் கழிவுநீர் துர்நாற்றம் வருகிறது. பல கிளைகளில் தரம் குன்றிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.