கர்ப்பிணிகள் பேராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம்? உண்மை என்ன!
பாராசிட்டமால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் என டிரம்ப் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பாராசிட்டமால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நான் மருத்துவர் அல்ல.
ஆனால், நான் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்கள் டைலெனால் (பாராசிட்டமால் அல்லது டோலோ) மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.
மேலும், அது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ வல்லுநர்கள், பாராசிட்டமால் மற்றும் ஆட்டிசம் ஆகியவற்றுக்கு நேரடி அல்லது காரண தொடர்பு இல்லை. அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு மக்கள் பீதி அடையக்கூடாது.
அதேசமயம், கர்ப்பிணிகள் தாங்களாக இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.