பாரா ஒலிம்பிக் மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை போலீசார் பரபரப்பு புகார் - நடந்தது என்ன?
பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் அண்ணாமலை தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது மகள் பவித்ரா (20), அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. விசாரணை செய்ததில், பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த கோபி (24) கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டுதர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோபி - பவித்ரா இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கோபி - பவித்ரா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகிறார்கள்.