நீங்கள் அப்பளப் பிரியரா? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு

gst papad cbic
By Irumporai Sep 02, 2021 08:16 AM GMT
Report

இந்திய உணவு வகைகளில் அப்பளத்திற்கு என்னைக்குமே தனி மவுசுதான் ..மாநிலத்திற்கு தகுந்தார் போல் பெயர் உருவம் மாறினாலும் அப்பளம் இந்தியாவில் இல்லாத இடமே கிடையாது என்றே கூறலாம். அதிலேயும் நம்ம தமிழ் நாட்டில்  கல்யாண வீடுகளில்  அப்பளத்தை பாயசத்தில் போட்டு உண்ணும் ஸ்டைலே வேறலெவல் தான்.

ஆசை, தோசை ,அப்பளம், வடை என்ற பழமொழிக்கேற்ப தன்கென தனி இடம் பிடித்துள்ள அப்பளத்தை  ‘’அதிகம் சாப்பிடாதீர்கள்கொலஸ்டிரால் அதிகம்.என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் ’’  விடுங்க டாக்டர் என அலட்சியப்படுத்திவிட்டு அப்பளத்தை மொறு மொறுவென நொறுக்கி சாப்பிடுவோர் ஏராளம்.

இந்த நிலையில் அப்பளப் பிரியர்களில் ஒருவரின் ஆதங்கம் டெல்லி வரை ஒலித்துள்ளது ,பொதுவாக, அப்பளம் வட்டமாக மட்டுமல்லாமல் சதுரமாகவும், நீள்வட்டமாகவும் என பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றது.

சதுர வடிவ அப்பளப் பிரியரான ஹர்ஷ் கோயங்கா என்பவர் டிவிட்டிர் சமூக வலைதளத்தில் தன் மனக்குமுறலை வெளியிட்டிருந்தார். அதில் வட்ட வடிவ அப்பளங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், சதுர வடிவ அப்பளத்துக்கு வரிவிதிப்பதால் சதுர அப்பளத்துக்கு அதிக விலை தர வேண்டியிருக்கிறது என மனம் வருந்தி குறிப்பிட்டு இருந்தார்.

அந்த அப்பள ரசிகரின் வேதனையும் குமுறல்களையும் பல ஆயிரம் அப்பளப் பிரியர்கள் லைக் செய்ய, அது டெல்லி வரை சென்ற ஹர்ஷ் கோயங்காவின் டிவீட்டை டேக் செய்த மத்திய மறைமுக வரி வாரியம், தனது ட்விட்டர் பதிவில் அப்பளம் வடிவத்தை பற்றியெல்லாம் எண்ணி வருத்தப்படவேண்டியதில்லை உங்கள் அப்பளம் சதுரமோ, வட்டமோ, எல்லா வகை அப்பளங்களுக்கும் வரிவிலக்கு உண்டு எனக் கூறி வயிற்றில் பாலை வார்த்தள்ளது.

நீங்கள் அப்பளப் பிரியரா? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு | Papad Exempt From Gst Cbic Clarifies

இதனால் குஷியானது ஹர்ஷ் கோயங்கா மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள அப்பளப் பிரியர்களும்தான் அப்புறமென்ன,  ''இனிமே ஒரு கடி .. அப்பளம் ஒரு கடி சோறுதான்'' .