டெல்லி அணியின் கேப்டன் இவரா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி ஆட்டங்கள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. இதற்காக 8 அணிகளும் அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் இருந்து விலகினார். இதனால் அணியை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக வழிநடத்தியதில் புள்ளிப்பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் டெல்லி அணிக்கு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ஷ்ரேயாஸ் விளையாட நல்ல உடல் திறனுடன் இருந்தாலும் பண்ட் தான் அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.