தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்த தொடரை ஒட்டுமொத்த ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்காக இந்திய அணியின் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்யும் பணிகளில் -பிசிசிஐ தேர்வுக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே அனைவரின் கவனமும் போட்டியின் மீது இருக்க, ரிஷப் பண்ட் மட்டும் சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் 36 டெஸ்ட்களில்100 பேரை வீழ்த்தி அந்த சாதனையை படைத்தார்.
ஆனால் ரிஷப் பண்ட் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 கேட்ச் + 8 ஸ்டெம்பிங் செய்து மொத்தம் 97 பேரை வீழ்த்திய விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். தென்னாப்பிரிக்க தொடரில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் போதும். இதனால் அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.