இப்படி இருந்தா நாங்க ஜெயிக்கவே மாட்டோம் - ரிஷப் பண்ட் வேதனை
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மோசமான பீல்டிங்கே முக்கிய காரணம் என டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் கடைசி போட்டியாக 56வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 164 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பெங்களூரு அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், டி20 போட்டிகளை பொறுத்தவரையில் பீல்டிங் மிக முக்கியம். நாங்கள் இந்த போட்டியில் செய்த பீல்டிங் போன்றே செய்து கொண்டிருந்தால், நிச்சயம் எதிரணி தான் வெற்றி பெறும் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த போட்டிக்கு முன்னதாக பீல்டிங்கில் உள்ள பிரச்சனையை சரி செய்து கொள்வோம். பனி காரணமாக பந்துவீச்சாளர்களால் பந்தை சரியாக பிடிக்க முடியவில்லை. இந்த தோல்வி சற்று வேதனையை கொடுத்துள்ளது எனவும் பண்ட் கூறியுள்ளார்.