ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமசந்திரன் சந்தித்து ஆலோசனை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து பிரதான கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேலையில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் எனவும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா விலகி கொண்டதால், அதிமுக நேரடியாக களமிறங்கும் எனவும் தற்போது வரை தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் இன்னோர் அணியாக இருக்கும் ஓபிஎஸ் தரப்பு என்ன செய்ய போகிறார்கள் என கேள்வி எழுந்த நிலையில் அது குறித்த ஆலோசிக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினார்.
வரவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.