தவெகவிற்கு ஆதரவு - புதிய கட்சி அறிவிப்பு
தவெகவிற்கு ஆதரவளிப்பதாக எம்ஜிஆர் அண்ணா திமுக அறிவித்துள்ளது.
தவெகவிற்கு புதிய கட்சி ஆதரவு
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜய்யின் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணி, தொகுதி பங்கீடு விசயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து விட்டது.
அதேவேளையில், ஆட்சி பங்கு என தவெக தலைவர் விஜய் அறிவித்தும் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில், புதிய கட்சி ஒன்று தேர்தலில் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
மூத்த அரசியவாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் நடைபெற்ற கட்சியின் முதல் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், "ஊழல் இல்லாத ஆட்சி அமைய தவெகவை ஆதரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் அண்ணா திமுக
அண்ணா மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன், 1971 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கிய போது, அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இணைந்தார்.

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக எம்ஜிஆரின் நிழல் போல் வலம் வந்தார்
அதன் பின்னர், பாமக, பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி, தேமுதிக, ஓபிஎஸ் ஆதரவு என பயணித்த அவர் தற்போது 86 வயதில் தனிக்கட்சியை தொடங்கியுள்ளார்.

முன்னதாக முஸ்தபா என்பவரின் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, தவெகவிற்கு ஆதரவளித்த நிலையில், தற்போது 2வது கட்சியாக பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அதிமுக தவெகவிற்கு ஆதரவளித்துள்ளது.