அதிமுகவில் இருந்து பண்ரூட்டி எம்எல்ஏ திடீர் நீக்கம்

election tamilnadu aiadmk panruti
By Jon Apr 11, 2021 01:09 PM GMT
Report

அதிமுகவில் இருந்து பண்ரூட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து பண்ரூட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Gallery