இன்று எடப்பாடி பழனிசாமி வெற்றி...நாளை பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார் - முத்தரசன் நம்பிக்கை

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Feb 24, 2023 09:57 AM GMT
Report

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார், நாளைக்கு பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார் என முத்தரசன்  தெரிவித்துள்ளார்.

முத்தரசன் நம்பிக்கை 

சென்னையில் சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சிபிஐ சார்பில் பிப்ரவரி 28ம் தேதி ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Panneerselvam will win tomorrow - Mutharasan

மேலும், அதிமுக பொதுக்குழு வழக்கிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்திருந்தது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அதிமுக தீர்ப்பு யாருக்கு சாமர்த்தியமோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார், நாளைக்கு பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். என தெரிவித்துள்ளார்.