ஓபிஎஸ்-ஐ வெல்வாரா தங்க தமிழ் செல்வன்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ops win aiadmk selvan
By Jon Mar 12, 2021 02:49 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்த அரசியல் கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முதற்கட்டமாக 6 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இரண்டாம் கட்டமாக 171 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

இதன் மூலம் 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது உறுதியானது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதில் போடிநாயக்கனூர் தொகுதியில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் களம் காண்பதால், ஓபிஎஸ்க்கும் தங்க தமிழ் செல்வனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஓபிஎஸ், கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் போடி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தினார்.

அது ஜெயலலிதா தலைமையிலான தேர்தல். இந்த முறை ஈபிஎஸ் தலைமையில் களம் காணுவதால், மீண்டும் ஓபிஎஸ் வெற்றி வாகையை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.