தந்தைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் இறங்கிய ஓபிஎஸ் மகன்
தேனியின் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகனான எம்.பி.ரவீந்திரநாத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுக-வை அழித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் பல சூழ்ச்சிகளை கையாண்டார்.
ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு சோதனைகளுக்கு இடையே அதிமுக-வை பலப்படுத்தி உள்ளனர். இந்த தேர்தலில் ஜெயலலிதா நம்முடன் இல்லை என்றாலும், பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வரும் தேர்தலிலும் மக்களின் நலனை காக்கின்ற வகையில் பலத்திட்டங்களை அதிமுக அறிமுகப்படுத்தும்.
அதாவது, குலவிளக்கு திட்டத்தில் மாதம் ரூபாய் ஆயிரத்து 500, இலவச வாஷிங் மிஷின், வருடத்திற்கு ஆறு இலவச சிலிண்டர்கள், மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலதிட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.