தேர்தலில் சீட் இல்லை.. வீடியோ வெளியிட்ட ஓபிஎஸ் மகன்- என்ன சொல்லியிருக்கிறார்?
ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் சமீபத்தில் சசிகலா உடல்நலம் பெற வாழ்த்து கூறி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியினை உருவாக்கினார். தேனியில், அதிமுக களப்பணியில் தீவிரமாக வேலை செய்யும் ஜெயபிரதீப் அதிமுக சார்பில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட 200-க்கும் அதிகமான மனுக்களை அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தனக்காக விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பி. ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதிமுகவில் கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறேன் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை.
யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை. சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை. நான் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, இயற்கை வளத்தை மேம்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என கூறியுள்ளார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது கம்பம் தொகுதியில் பெரும் சவாலாக உள்ளது.
அங்கு இஸ்லாமியர்களின் ஓட்டு அதிகம்.
அதே சமயம் இது அதிமுகவிற்கு சவாலான தொகுதி ,இதனால், ஜெயபிரதீப் ஒதுங்கி கொண்டார் என கூறப்படுகிறது.