ஆ.ராசா தனது சுய வாழ்வில் சரியாக இருக்கிறாரா? - ஓபிஎஸ் கேள்வி
முதலவர் எடப்பாடி பழனிச்சாமியினை திமுக எம்.பி. ஆ.ராசா தவறாக பேசியதற்கு, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பதிவில்:
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தும் கொள்கிறேன் என்றார் பதவி வெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் .
மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேசவேண்டும். இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன் என ஓபிஎஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்து பேசிய திரு.ஆ.ராசாவிற்கு கடும் கண்டனங்கள்! pic.twitter.com/bvjEnj5Q3D
— O Panneerselvam (@OfficeOfOPS) March 27, 2021