பாம்பு விஷத்தை விட பழனிசாமி கொடுமையானவர்- ஸ்டாலின் பேச்சு
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆரல் வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனை ஆகியோரை ஆதரித்து பரப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது - கொளுத்தும் வெளியில் வெயிலில் மக்கள் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்தால் அதிமுக ஆட்சியின் கொடுமைக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல போல தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இங்கே பிரச்சாரம் செய்ய வந்தார். ஊர்ந்து ஊர்ந்து சென்ற அவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார்.
அதனை சொன்னால் அவருக்கு கோபம்தான் வரும். பாம்புக் கடி விஷத்தை விட பழனிசாமி கொடுமையானவர். கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்துகொண்டு தற்போது அவருக்கு துரோகம் செய்திருக்கிறார். அவர் எடப்பாடி உடன் சேர்ந்ததால் தான் தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். தேர்தலுக்கு பிறகு தளவாய் சுந்தரம் நிச்சயம் பாஜகவில் சேர்ந்து விடுவார்.

பொன் .ராதாகிருஷ்ணன் பல வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. அவர் பொன் ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் அதிமுக - திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படும். கொரோனா காலத்தில் ஐந்தாயிரம் கொடுங்கள் என்று கூறினோம். ஆனால் அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதில் 4,000 ரூபாய் கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.