அதிமுகவிலிரிந்து விலகுபவர்களால் எந்த பாதிப்பும் இல்லை - துணை முதல்வர் பன்னீர் செல்வம்
அதிமுக கட்சியில் இருந்து விலகுபவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக மிகப் பெரிய ஆல மரம் போன்றது. இதிலிருந்து யார் சென்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, ''தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ம.முத்துராமலிங்கம் திமுகவில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு, அதிமுக மிகப்பெரிய ஆல மரம். கட்சியிலிருந்து யார் சென்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுகவினர் திமுக, அமமுக கட்சிக்கு செல்வதால் அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்குமா என்பது குறித்த கேள்விக்கு , பாதிக்காது எனக் கூறிச் சென்றார்.