இந்த முறையும் நாங்க தான்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக தலைமை ஆணையிட்டிருந்தது.
அதனை ஏற்று இன்று நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று பேசிய பன்னீர் செல்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதியில் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி அப்பகுதி மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களின் அடிப்படை தேவைகளை செய்துள்ளேன். தற்போது மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளேன்மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என கூறினார்.
கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளோம். ஆகையால், மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சியை அமைய செய்வார்கள் என கூறினார்
போடிநாயகனுர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.