ஓபிஎஸ் ஈபிஎஸ் அவசர ஆலோசனை: சூடுபிடிக்கும் தேர்தல் களம்
சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.