பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம்

fake dmk panneerselvam promise
By Jon Mar 24, 2021 03:06 PM GMT
Report

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிகிறார்.

அவர் போடி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் | Panneerselvam Dmk Making False Promises Speech

அப்போது அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது - தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மக்கள் நலனுக்காக ஜெயலலிதா பல திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வந்தார். திமுக கூறிய 2 ஏக்கர் நிலம் என்ன ஆனது? என்று தெரியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்து வருகிறது.