தேர்தலில் தோற்றதற்கு காரணம் பன்னீர் தான் - இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Aug 18, 2022 06:50 AM GMT
Report

ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓ.பன்னீரசெல்வம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு 

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுக என்ற அற்புதமான இயக்கத்தை தோற்றுவித்துள்ளனர் மக்களிடம் செல்வாக்கு பெற்ற பிரதான கட்சி அதிமுக தான் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை சிலர் தன் வசப்படுத்த சிலர் நினைக்கிறார்கள்.

தேர்தலில் தோற்றதற்கு காரணம் பன்னீர் தான் - இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு | Panneer Is The Reason For The Election Loss Eps

பொதுக்குழு உறுப்பினர்களால் தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.

பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் இணைந்த போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைபாளர்கள் பதவிகளை உருவாக்க நிர்பந்தம் பொதுச் செயலாளருக்கு சமமாக இரட்டை பதவிகள் கொண்டு வந்து சட்டவிதிகள் திருத்தப்பட்டன.

உட்கட்சி தேர்தல் முடிந்த பின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் பெற வேண்டுமென திருத்தம் கொண்டு வரப்பட்டது. பொது உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமென விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன. பொதுக்குழுவை நடத்த விடாமல் தடை செய்ய காவல்துறையை நாடினார் பன்னீர்செல்வம்.

நானும் ஓபிஎஸ்-ம் இருக்கும் கூட்டத்தில் தான் மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொதுக்குழுவை நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் தான் நீதிமன்றத்தை நாடினார் கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட வில்லை.

ரவுடிகளையும், குண்டர்களையும் வைத்திருப்பவரோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என பன்னீர்செல்வம் நினைக்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே வன்முறை அரங்கேற்றப்பட்டது.

ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆவணங்களை அள்ளிச் சென்றவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?

கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும் போது அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?

கடந்த சட்டமன்ற தேர்தலில் பன்னீர்செல்வத்தால்தான் அதிமுக தோற்றது. முதலமைச்சர் வேட்பாளராக என்னை பன்னீர்செல்வம் ஏற்க மறுத்ததே தோல்விக்கு காரணம் கட்சியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால் மக்களிடம் அதிமுக மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்?

1989-ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு எதிரணியாக இருந்த ஜானகி அணிக்கு வேலை பார்த்தவர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா அணிக்குஎதிராக போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஏஜென்ட்டாக இருந்தார். 

ஒற்றை தலைமை குறித்து 15 நாட்கள் பன்னீர்செல்வத்திடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்ட விதிகளை பின்பற்றி செயல்பட்டு உள்ளதால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம்.

நிச்சயம் நல்லது நடக்கும் எப்போதும் நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான் கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம் நாங்கள் தான் முன்நின்றோம் பன்னீர்செல்வம் நிற்கவில்லை தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவில் ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டியதுதானே?

ஆட்சிக்கு வந்த ஓராண்டு மற்றும் நான்கு மாதங்களில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை தமிழகத்தில் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது.

திட்டங்கள் ஏதுமில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, தமிழகத்தில் போதை பொருள் விற்றக்கப்படுகிறது.