இனி பானிபூரி, தெருவோர கடைகளுக்கு இது கட்டாயம் - கடும் எச்சரிக்கை!
பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு பதிவு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பானிபூரி கடை
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினர்.
அதில், பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு,
பதிவு உரிமம்
மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. மேலும், பானிபூரி விற்பனை செய்வோருக்கு, சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சென்னை முழுதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும்.
குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல்,மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.