ஆன்லைன் விற்பனை.. 1 வருடத்தில் 40 லட்சம் ரூபாய் சம்பாதித்த பானிபுரி கடைக்காரர் - வெளியான தகவல்!
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பானிபூரி கடைக்காரர் ஒரு வருடத்தில் ரூ 40 லட்சம் ரூபாய் சம்பாதித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன்
தமிழத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி பிரியர்களாக உள்ளனர்.இதில் உருளைக்கிழங்கு, வெங்காயம், பானி பூரிக்காக ஸ்பெசலாக தயாரிக்கப்படும் நீர் அனைத்தையும் ஒன்றாகப் பூரிக்குள் வைத்து சாப்பிடுவதே தனி ருசி.
இந்த பானிபூரியை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் என்றாலும் தமிழர்களும் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பானிபூரி கடைக்காரர் ஒரு வருடத்தில் ரூ 40 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி கடை வைத்துள்ள ஒருவருக்கு, தமிழக அரசின் ஜிஎஸ்டி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் 2023 - 24 ம் ஆண்டில் மட்டும் அந்த பானிபூரி கடைக்காரர் ரூ 40 ஆன்லைன் டெலிவரி மூலம் மட்டும் சம்பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.
பானிபூரி
இது குறித்து நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பானிபூரி கடைக்காரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஃபோன் பே மூலம் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அளவுக்கு மீறி பணப் பரிமாற்றத்திற்குப் பின்னரும் ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இதில் கவனிக்கப்பட விஷயம் என்ன வென்றால் அந்த நோட்டீஸில் பானிபூரி கடைக்காரர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கடை வைத்திருக்கிறார் என்பதுபற்றி எந்த விவரமும் அந்த நோட்டீஸில் இல்லை.