பங்குனி உத்திரம் 2023: விரதம் இருந்தால் இத்தனை பலன்கள் - குலதெய்வத்தை மறந்துடாதீங்க!
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரம்
குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.
ஏப்ரல் 5-ம் தேதியே பங்குனி உத்திரம் என்று கூறப்படுகிறது. ஆனால் சில ஆலயங்களில் ஏப்ரல் 4 -ம் தேதியே பங்குனி உத்திரம் கொண்டாடுகிறார்கள். வீட்டில் நாம் வழிபாடு செய்யும்போது உரிய முறைப்படி பௌர்ணமியோடு கூடிய உத்திர நட்சத்திர நாளான 5-ம் தேதி கொண்டாடுவதே சிறப்பு.
விரத பலன்கள்
இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும். தலைமை பொறுப்புக்கு சூரிய பகவான் தான் காரகம் என்பதனால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கினால் நல்ல வேலையும் வேலையில் இருப்போர்களுக்கு பதவி உயர்வும் தேடி வரும்.