மீண்டும் தர்மயுத்தம் .. COME BACK பழைய பன்னீர்செல்வம் - செக்வைத்த ஓபிஎஸ் சிக்கலில் இபிஎஸ்
அதிமுகவில் இரண்டாம் அணியை பலமாம உருவாக்கி மீண்டும் கட்சியினை தனதாக்கும் முயற்சியில் ஓபிஎஸ் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஷியில் இபிஎஸ் டீம்
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் இபிஎஸ் டீம் குஷியாகியுள்ளது , இனிமேல் நமாதன் என கெத்தாக உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் பார்த்தால் அவர்களின் கூடாரம் கலையும் நிலையில் உள்ளது என்றே கூறலாம். ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்பதை அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் நோக்கிட்யுள்ளனர்.

ஆனால் ஓபிஎஸ்க்கோ தனிப்பட்ட முறையில் தனது சகோதரர், மனைவி, என தொடர்ந்து துக்க நிகழ்வுகள் நடக்க தற்போது அவரது தாயாரும் காலமாகியுள்ளதால் கலங்காமல் இருந்த ஓபிஎஸ் சற்று கலங்கி போயுள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
களத்தில் ஓபிஎஸ்
இந்த நிலையில் அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்ப இரண்டு திட்டங்களை ஓபிஎஸ் தன் வசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனபடி ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தீவிரப்படுத்துவதும் , இது குறித்து நேரடியாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பிரிந்த சொந்தங்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் அடுத்த திட்டம் ஒன்றை கையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் பிளான்
அதேபோல, விரைவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்த போகிறாராம் ஓபிஎஸ்அதிமுக தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு + ஜெயலலிதா பிறந்தநாள் + எம்ஜிஆர் பிறந்தநாள் ஆகியவையை உள்ளடக்கி முப்பெரும் விழாவை, மாநாடாக நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் திருச்சியில் நடத்த போகிறாராம் ஆனால், இன்னும் தேதி முடிவாகவில்லை மற்றபடி, அனைத்து ஏற்பாடுகளையும், ஓபிஎஸ் டீம் செய்ய தயாராகி வருகிறது இந்த மாநாட்டில் முக்கிய முடிவினை ஓபிஎஸ் எடுக்கக்கூடும் என்கிறார்கள்.

இந்த மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது , இதன் மூலம் திமுகவின் இரண்டாம் அணியினை பலபடுத்த திட்டம் உள்ளதாக கூறப்படுகினறது. இதனால் எடப்பாடிக்கு கடும் அழுத்தம் தரலாம் எனக் கூறினாலும் இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என தெரியவில்லை எனக் கூறுகின்றனர் அரசியல் வல்லுனர்கள். காரணம், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்று சொல்லி கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.. ஒன்றிணைந்த அதிமுக உருவாக்கும் வரை ஓயமாட்டோம் என்கிறார் விகே சசிகலாமக்கள் எங்கள் பக்கம்தான் என்கிறார் ஓபிஎஸ்.

இப்படி ஆளுக்கு ஒருபக்கம் ஒவ்வொரு நிலைப்பாட்டி உள்ள நிலையில், இவர்கள் ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா? இந்த தலைவர்கள் ஒன்றிணைந்தாலும், இவர்களின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதாரவாளர்களின் முக்கிய வேண்டுகோளே மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வர வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும் ,
ஆக மீண்டும் எழுமா ஓபிஎஸ்அணி ? தர்மயுத்தம் தொடங்குகின்றதா ? அதற்கான பதிலை காலம் தான் கூற வேண்டும்.