பாண்ட்யா இல்லையென்றாலும் பரவாயில்லை : கபில்தேவ் கணிப்பு
ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை என்றாலும் இந்திய அணிக்கு பாதிப்பு இருக்காது,'' என கபில்தேவ் தெரிவித்தார்.
இந்திய அணி 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா முதுகுப்பகுதி சிகிச்சை காரணமாக பந்து வீசுவதை தவிர்த்து வருகிறார். இந்த ஆண்டு சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இவர் பந்துவீசவே இல்லை.
14வது ஐ.பி.எல்., சீசனிலும் மும்பை அணிக்காக பேட்டராகவே களமிறங்கினார். இந்த நிலையில் நடப்பு டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீசாத ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கிலும் தடுமாறினார்.
ஆகவே பாண்ட்யாவுக்கு பதில் ஷர்துல் தாகூரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் . பாண்ட்யா பந்து வீசாததால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது , அதே சமயம் இது கேப்டனாக உள்ள கோலிக்கு சிக்கலாக இருக்கும். ஒருவேளை பேட்டிங், பவுலிங்கிற்கு தயாராக இருந்தால் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்த கேப்டனுக்கு கூடுதல் உதவியாக இருக்கும் எனக் கூறினார்.
மேலும் ,பாண்ட்யாவுக்கு பேட்டிங் திறமை அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கலாம். குறைந்தது 2 ஓவர் பந்துவீசினால் அணிக்கு உதவியாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மற்றவர்களை கொண்டு சமாளிக்கும் வகையில் இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பர் என நம்புவதாக கூறியுள்ளார்.