உடற்பயிற்சி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழக சட்ட மன்ற தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தினமும் ஆவடியில் உள்ள பூங்கா பூங்காவிற்கு சென்று நடைப்பயிற்சி மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆவடி அனைத்து வியாபாரிகள் சங்கம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்போர் சங்கத்தினர் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆவடியில் செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட உடல் பயிறச்சி சங்க நிர்வாகிகள் அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து நடைபெறவுள்ள தேர்தலில் தங்களது முழு ஆதரவை தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்திய பின் அவர்களுக்காக உடற்பயிற்சி செய்து காட்டினார்.
அங்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த இளைஞர்கள் இரட்டை இலை சின்னத்தை காட்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.