எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் : தேமுதிக-விற்கு வாழ்த்து சொன்ன அமைச்சர்
தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேட்பாளராக களத்தில் உள்ள அமைச்சர் க. பாண்டியராஜன் ஆவடியில் உள்ள பிரசித்திபெற்ற பச்சையம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் சிவன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால் இதுவரை போட்டியியிட்டதை விட அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர்களின் திறன் அறிந்து தொகுதி வழங்கினோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் வேறு பாதையினை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என சொல்ல விரும்புகிறேன்.
அந்தக் கட்சி அவர்கள் பாதையில் போகட்டும், நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம்.
அவர்களைவிட மிக மிக வலிமையான பாஜக, பாமக எங்களோடு உள்ளது. வலிமையான கூட்டணியாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றார்.