நான் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல..ஆவடியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேச்சு
நான் தொழிலார்களுக்கு எதிரானவன் அல்ல என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தெர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் வாக்கு செகா¢க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மா.பா.பாண்டியராஜன் பல்வேறு அமைப்புகள், சங்கங்களிடமும் தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று ஆவடி தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பதாகை பகுதியில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் நடை பெற்றது. வன்னியகுல சத்திரியர் நல சங்க்கத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
செயலாளர் அருண்விஜய், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்ததுடன்,தொழிலாளர்களின் வாக்குகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- "நான் தொடர்ந்து ஆவடி தொகுதியில் வாக்கு பல்வே று தரப்பு மக்களை ச ந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
எனக்கு வாக்கு கேட்டு,வருகிற 31-ந்தேதி திருநின்றவூர் ரவுண்டானா பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆவடி தொகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பத்தில் உள்ளவர்களின் வாக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
இதனால் எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் அவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒருசில கட்சிகள் என்னை பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் உண்மையற்ற விசயங்களை எடுத்து கூறி ரகசியமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
இதை நாம் முறியடிக்க வேண்டும். நானும் சாதாரண தீப்பெட்டி தொழிலாளியின் மகன் தான். சிறுவயதிலெயே தந்தையை இழந்த நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு பல்வேறு சிரமங்களை தாண்டி படித்து பெரிய நிறுவனங்களை நடத்தும் அளவுக்கு முன்னெறி உள்ளேன். இது எனது உழைப்புக்கு கிடைத்த பலன். ஆனால் என்னை வலதுசாரி சிந்தனை உடைய முதலாளி வர்க்கமாகவும், தொழிலாளர்களுக்கு நான் முற்றிலும் எதிரானவன் என்ற ஒரு மாய பிம்பத்தையும் அந்த கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.
தேர்தல் நிபுணர் ஒருவரின் ஆலோசனைப்படி எதிர்கட்சிகள் இந்த பணியை செய்து வருகின்றன. இது மட்டுமின்றி நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கைக்கூலி என்றும், கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சகோதர சகோதரர்களுக்கு எதிரானவன் என்று என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். இதை முறியடிக்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஆவடி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இது அனைவருக்கும் தெரியும்.
இந்த திட்டங்களை அவர்களிடம் எடுத்து செல்ல வெண்டும்.
நான் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வெண்டும். அதற்கான பணிகளில் இந்த சங்கத்தினர் ஈடுபட்டு தொழிலாளர்களின் வாக்குகளை பெற நீங்கள் தோள் கொடுக்க வெண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.