விளம்பரப் பிரியர்களுக்கு ஆளுநர் ஊக்கம் தரக்கூடாது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
விளம்பரப் பிரியர்களுக்கு ஆளுநர் ஊக்கம் தரக்கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். ஆளும் கட்சி அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் திமுக வழங்கியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார்.
இல்லாததால்தான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளிக்கின்றனர். ஊடகத்தில் செய்திகள் வர வேண்டுமென வேண்டுமென்றே திமுகவினர் புகார் அளிக்கின்றனர். இதுபோன்ற விளம்பரப் பிரியர்களுக்கு ஆளுநர் ஊக்கம் தரக்கூடாது என்று ஊடகங்கள் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரிடம் திமுக அளித்த முதல் பட்டியலில் எந்தவித சாரமும் இல்லை என்று உலகத்துக்கே தெரியும்.
இரண்டாவது முறையாக ஒரு மரியாதைக்காக ஆளுநர் திமுகவினரைச் சந்திக்கிறார். இதை அரசியல் ரீதியாக விளம்பரம் செய்ய ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.