பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு விரைவில் திருமணம்? - ரசிகர்கள் அதிர்ச்சி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், நடிகை காவியா. தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று நடத்தி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவியா.
இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியின் தங்கையாக நடித்து வந்தார். பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா மறைந்ததால் அவருக்கு பதிலாக இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆரம்பத்தில் பலர் அவரை இந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். பலரும் முல்லை இறந்து விட்டது போலவே சீரியலிலும் காட்டி விடும்படி கூறினர். ஆனால், நடிகை காவியா தொடர்ந்து அந்த வேடத்தில் நடித்து வந்தார்.
தனது தேர்ந்த நடிப்பால் இவர் தற்போது அனைவராலும் முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார். இந்நிலையில், நடிகை காவியா லேட்டஸ்டாக ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
அதில் மணப்பெண் வேடத்தில் போட்டோஷூட் நடத்தி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அதே போல அந்த உடை அலங்காரத்தில் ரீல்ஸ் ஒன்றும் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த விடீயோவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.