சீரியலுக்காக நடிகர் செய்த காரியம் - புது கெட்டப்புக்கு குவியும் வாழ்த்து
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அம்மா இறப்பிற்கு வர முடியாத கண்ணன் மொட்டை அடித்து, அம்மாவிற்கு காரியம் செய்கிறார்.
இந்நிலையில் அவரது இந்த புது கெட்டப்பை பாராட்டி அவரது சொந்த தங்கை இன்ஸடாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். இதுவரை செல்லமாக வளர்க்கப்பட்ட அவர் குடும்பம் நடத்துவதில் பல கஷ்டங்களை எதிர் கொள்கிறார்.
மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவமாக இருந்தாலும், கண்ணன் மீது இருக்கும் பாசத்தால் சில உதவிகளை மறைமுகமாக செய்கின்றனர். இந்நிலையில் கண்ணன் வீட்டை விட்டு சென்ற கோவத்தில் லட்சுமி அம்மா மன வருத்தத்தில் இருந்து உடல்நிலை சரி இல்லாமல் சென்று இறந்து விட்டார்.
அன்று கண்ணனும் வெளி ஊருக்கு செல்ல அம்மா இறந்த தகவலை சொல்ல முடியாமல் இருக்கிறது. மாலை வரை காத்திருந்தும் கண்ணன் வராததால் இறுதி சடங்கு செய்து முடித்து கொல்லி வைக்கப்படுகிறது.
அப்போது வரும் கண்ணன் அம்மாவை பார்க்க முடியாததை நினைத்து கதறி அழுகிறார். பின் மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி காரியம் செய்கிறார். அதை பார்த்து மூர்த்தி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
சீரியலுக்காக கண்ணன் மொட்டை அடித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமின் உண்மையான தங்கை கண்ணனின் புது கெட்டப்பை ஷேர் செய்து அதில் உனது தங்கச்சி என சொல்ல பெருமையாக இருக்கிறது என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்களும் நடிகர் சரவணனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.