பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு உருவாகும் புதிய பிரச்சனை

pandian-stores kathiri
By Gokulan 1 வருடம் முன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் கதிர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு புதிதாக பிரச்சனை உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதன் பெயரில் கைது செய்தனர்.இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார். என்னதான் புதிதாக முல்லை கதாபாத்திரத்திற்கு ஒருவரை கொண்டுவந்திருந்தாலும். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கதாபாத்திரம் ஜோடிகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துபோகின.

மேலும் குமரனுக்கு புதிதாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்த காவ்யாவுடன் எந்தளவுக்கு ஒத்துழைப்பார் என்பதில் புதிய சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.