19 வருடங்களுக்கு பின் அழகிய தங்கச்சி பாப்பா! புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இளம் நடிகை

baby mother Pandian Stores neha
By Jon Mar 25, 2021 02:47 PM GMT
Report

சித்தி 2, பாக்யலட்சுமி சீரியல் நடிகை நேகா மேனன், தனக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சீரியல்களில் கலக்கி கொண்டிருப்பவர் நேகா மேனன்.

தற்போது சித்தி 2 மற்றும் பாக்யலட்சுமி சீரியலில் அசத்திக் கொண்டிருக்கிறார், இவருக்கு தற்போது தங்கச்சி பாப்பா பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

 

அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டில் பிறந்த நேஹாவுக்கு, கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சகோதரி கிடைத்துள்ளார்.

மேலும் தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்க காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.