அதுக்கு நானா பொறுப்பு? அசிங்கப்படுத்திட்டாங்க! - குமுறிய பாண்டியன் ஸ்டோர் பிரபலம்
விஜய்யின் வாரிசு படப்பிடிப்பில் தனக்கு அவமானம் நேர்ந்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவிச்சந்திரன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
வாரிசு
தளபதி விஜய் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா,
மேலும் பிரகாஷ் ராஜ் , சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தனக்கு அவமானம் நேர்ந்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - ரவிச்சந்திரன்
அதில், “வாரிசு படத்தின் அசோசியேட் இயக்குநர் ஒருவர் ஃபோன் செய்து, ஒரு கேரக்டரில் நடிக்க ஃபோட்டோ அனுப்புங்கன்னு சொன்னாரு. அனுப்புனேன், பிறகு செல்ஃபி அனுப்ப சொன்னாங்க, அதையும் அனுப்புனேன். அடுத்த நாள் நேர்ல வர சொல்லி இயக்குநர், உதவி இயக்குநர்கள் எல்லாரும் நேர்ல பாத்தாங்க. ஒரு 20 ஃபோட்டோ எடுத்தாங்க.
பிறகு மாலை 6 மணிக்கு ஃபோன் பண்ணி, நாளைக்கு காலைல ஷூட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க. கடைசி நேரத்துல சொல்றாங்களேன்னு பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர் கிட்ட சூழ்நிலையை சொன்னேன். பெரிய நடிகரோட படம், 7 நாள் கேட்டுருக்காங்க.
அதுக்கு செட்டாக மாட்டீங்க
அதுல நடிச்சா, என்னோட, கரியர் உயரும்ன்னு சொன்னேன். சரி போய்ட்டு வாங்கன்னு சீரியல் இயக்குநர் அனுப்பி வச்சார். அடுத்த நாள் அந்த இடத்துக்கு போய், மேக்கப் போட்டு, காஸ்ட்யூம் மாத்தி, டிபன் சாப்ட்டாச்சு. இயக்குநர் பாத்துட்டு கேரவன்ல இருக்க சொன்னாரு.
கொஞ்ச நேரம் கழிச்சு, மேனேஜர் வந்து, சார் நீங்க ரொம்ப ரிச்சா தெரியுறீங்க, இந்த கேரக்டருக்கு ரொம்ப பாவப்பட்ட தோற்றத்துல உள்ளவர் தான் வேணும். நீங்க அதுக்கு செட்டாக மாட்டீங்கன்னு உங்கள கிளம்ப சொல்லிட்டாரு இயக்குநர்ன்னு சொல்றாரு.
அவமானம் இது
இதுல என் தப்பு என்ன இருக்கு? என்ன லுக்குன்னு சொல்லிட்டா மேக்கப் மேன் மாத்தி தரப்போறாரு. கேமரா முன்னாடி எனக்கு நடிக்க வரலைன்னு திருப்பி அனுப்புனா கூட பரவால, நான் சந்தோஷப்படுவேன்.
ஃபோட்டோல பாத்து, நேர்ல பாத்து கடைசில நான் செட்டாக மாட்டேன்னா அதுக்கு நானா பொறுப்பு? படப்பிடிப்பு தளத்துல எனக்கு நேர்ந்த அவமானம் இது. மசாலா கம்பெனி நடத்தி, 40 வயதுசுல நடிக்க வந்து இன்னைக்கு 57 வயசுல நடிச்சிட்டு இருக்க ஒருத்தன வர சொல்லி,
திருப்பி அனுப்புனா அவனுக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு அங்க இருந்த யாரும் உணரலை. இது விஜய் சாருக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டாரு” என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.