மறைந்த தோழர் தா.பாண்டியன் உடல் இன்று நல்லடக்கம்
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அவர் சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மறைந்த பொதுவுடைமை தலைவர் தா. பாண்டியன் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.