மதம் மாற்றுவதுதான் அமேசானின் நோக்கம்: ஆர்எஸ்எஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல்

amazon panchjanyaterms eastindiacompany
By Irumporai Sep 28, 2021 12:26 AM GMT
Report

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான `பாஞ்சன்யா', சில வாரங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தை வெளிநாட்டு உளவு நிறுவனம் என விமர்சித்து கட்டுரைஎழுதியது.

இந்த நிலையில், கிழக்கிந்திய கம்பெனி 2.0' என்று தலைப்பிட்டு பாஞ்சன்யா இதழின் ஆசிரியர் குழு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய சந்தையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அமேசானின் திட்டம் என்றும் அதற்காக முதலில் அரசியல், பொருளாதார ரீதியாக உள்ளே நுழைந்து பின்னர் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் அது ஈடுபட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு,.பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி முதலில் இந்திய கலாச்சாரத்தை சிதைத்து, பின்னர் மக்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைத்தான் இப்போது அமேசான் மேற்கொண்டு வருகிறது.

மதம் மாற்றுவதுதான் அமேசானின் நோக்கம்: ஆர்எஸ்எஸ் பத்திரிகை  அதிர்ச்சி தகவல் | Panchjanya Terms Amazon As East India Company 2

தனது ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் தாண்டவ், பாதல் லோக் உள்ளிட்ட வீடியோ தொடர்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் இந்து விரோத கொள்கைகளைக் கொண்டவை. அமேசானின் பிரதான நோக்கமே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுதான். இதற்காக2 தன்னார்வ அமைப்புகளுக்குஅது நிதி உதவி அளித்துள்ளது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.