ஊராட்சி மன்ற தலைவர் அறைந்ததால்... ஊழியர் தற்கொலை!
கொடைக்கானல் பூலத்தூர் கிராமத்தில் தண்ணீர் திறந்து விடும் பணியாளரை ஊராட்சி மன்ற தலைவர் அறைந்ததால் மனமுடைந்து மின்சார கம்பியில் பாய்த்து தற்கொலை, செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பூலத்தூர் ஊராட்சியில் தண்ணீர் திறந்தும் விடும் நிரந்தர அரசு பணியாளராக குமரேசன்(61) என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிகிழமை தண்ணீர் திறந்து விடும் (குமரேசன்) முதியவர் மது அருந்துவதாக கூறி பூலத்தூர் சுயேட்சை ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன்(31) முதியவரின் கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது,
இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த ஞாயிற்று கிழமைதனது வீட்டிற்கு சென்றவர் வெளியில் வர வில்லை.
குமரேசனை காண வில்லை என அவரது தம்பி மகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன் பகுதி பூட்டி இருந்துள்ளது.
பின்பக்கமாக சென்று பார்த்துள்ளனர் அப்போது குமரேசன் வீட்டில் இருந்த மின்சார கம்பியினை பிடித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.