தமிழக அரசு செய்யும் தவறுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் பலிகடாவா?: ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், எதையும் தமிழக அரசு நிறைவேற்றாத போது, எதற்காக? கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும்?, ஊராட்சி மன்ற தலைவர்கள் தாங்கள் பலிகடா ஆவதாக என விருத்தாச்சலம் அடுத்த விசலூர் ஊராட்சி மன்ற தலைவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம சபை கூட்டம்
சாஸ்திர சம்பிரதாயத்திற்கு மட்டுமே, கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த விசலூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயச்சந்திரன் என்பவர் உள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து, ஆதங்கத்துடன் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெற்று வருவதாகவும், தற்போதுள்ள தமிழக முதல்வர் இரண்டு கிராம சபை கூட்டம் கூடுதலாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கிராம சபை கூட்டம் நடைபெறுவதால் மக்களுக்கு என்ன பயன் என என்பதை பற்றி கூறுகிறார்.
கிராம சபை கூட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும், அடிப்படை வசதிகள் மற்றும் செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து கிராம மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தேவையான வசதிகளை செய்து கொள்வதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கமாகும்.
ஆனால் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடுத்தடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறதா என்றும்?, கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எந்தெந்த துறைக்கு அனுப்பப்படுகிறது என்றும், அதற்கான நிதி ஆதாரம் எங்கே இருந்து வருகிறது எனவும், நிறைவேற்றப்படும் தீர்மாணங்கள் அனைத்தும் யார் பரிசீலனை செய்வது என எந்தத் தகவலும் தெரிவதில்லை என கிராம ஊராட்சி மன்ற தலைவரே குற்றம் சாட்டுகிறார்.
சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு மட்டுமே, கிராம சபை கூட்டம் நடைபெறுவதாகவும், இதற்கான பலன் மக்களிடம் சென்று அடைகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என குற்றம் சாட்டுகிறார்.
ஊராட்சி மன்ற தலைவர் பேசும் ஆடியோ
அதேபோல் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் பொதுமக்கள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தாங்கள் தான் பொறுப்பு என்றும், ஆனால் அதற்கான பயன் மற்றும் நிகழ்வுகள் கிடைக்கிறதா என்றால்? நிச்சயமாக இல்லை என தெளிவாக தெரிவிக்கிறார்.
தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடத்தி வருவதாகவும், கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் எதையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் இதற்கு முழு காரணம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் என பொதுமக்கள் நினைப்பதாக தெரிவிக்கிறார். அதேபோல் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை கொடுக்க வேண்டிய தமிழக அரசு வழங்கவில்லை என்றும், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு கிராம ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவிக்கிறார்.
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எழுத்து வடிவில் எழுதப்பட்டு, ஒன்றிய அலுவலகம், மாவட்ட அலுவலகம், மற்றும் தமிழக அரசுக்கு அனுப்புவது என்பது ஒரு சம்பிரதாய முறைப்படியாகவும், கடமைக்காகவும், மட்டும் தான் நடைபெறுவதாக குற்றம் சாட்டுகிறார்.
பலிகடவா
இதனால் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில், ஒரு துளி கூட தமிழக அரசு செயல்படுத்தவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இவ்வாறு செயல்படுவதால், எதற்காக கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
இதற்காக ஏன் ஊராட்சி மன்ற தலைவர்களை பலிகடாக ஆக்க வேண்டும் என கேள்வியை, தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக, தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கிறார்.
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடுத்தடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அதற்கு உண்டான காரண காரியங்களை தமிழக அரசு, தெளிவுபடுத்தினால் மட்டுமே கிராமப்புற மக்களுக்கு தெரியும் என கோரிக்கை வைக்கிறார்.
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை என்பது வெட்ட வெளிச்சமாக ஊராட்சி மன்ற தலைவர் பேசியிருக்கும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.