வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை : போலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்

By Irumporai Nov 19, 2022 05:32 AM GMT
Report

கூடுவாஞ்சேரி அடுத்து மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் கொலை வழக்கில் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபர்களை சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கார்த்திக் நகர் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியை பார்வையிட்டுவிட்டு, பின்னர் அவரது நண்பர்களுடன் ராகவேந்திரா நகருக்கு செல்லும் சந்திப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை : போலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Panchayat Council President Killed By Country Bomb

அப்போது, 4 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. மிண்டு ஓடிய வெங்கடேசனை பின்தொடர்ந்து துரத்தி வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி, தப்பிச்சென்றது.  

வெளியான சிசிடிவி காட்சிகள்

இதில், ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் மணிமங்கள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

அதில் இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடிய காட்சி பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இமாம், முகமது அலி ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டதில்

வெங்கடேசன் தான் காரணமாக இருக்கும் என அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் வெங்கடேசனை பழிவாங்க வேண்டும் என இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் தாம்பரம் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, மணிமங்கலம் உதவி ஆணையர் ரவி மற்றும் ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே, இது சம்பந்தமாக 10 பேரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.